கவனமாக இருந்தால்... கடிக்கலாம்... நொறுக்கலாம்!

முதுமையில் மிக்சர், முறுக்கை, கடிக்க முடியாத ஏக்கம் இனி இல்லை. பல் செட் பொருத்தி எதையும் கடிக்கலாம் நொறுக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

முழுமையாகவோ அல்லது, குறிப்பிட்ட பல்லை மட்டும் தனியாக பொருத்தி கொள்ளவோ, மருத்துவ வசதிகள் வந்துவிட்டன.

தனியாக பல் கட்டியிருந்தால் சிலர், அதை தேய்க்க பயந்து அப்படியே விட்டுவிடுவர்.

இதில் கிருமிகள் பரவி, வாய் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் ஆண்டுக்கு ஒருமுறை, பல் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

பல் செட் என்பது நிரந்தர பற்கள் போன்றதல்ல. இதை பொருத்தி, 7 ஆண்டுகள் கழித்து, புதிதாக மாற்றுவது அவசியம்.

இதை செய்யாமல் விட்டுவிட்டால், ஈறுகளின் அடியில் வளரும் எலும்புகள் தேய்மானம் அடையும். புண் ஏற்படலாம். நீண்ட கால புண் புற்றுநோயாக மாறலாம்.

வயதானவர்களுக்கு பற்கள் தேய்ந்து கூர்மையாக மாறிவிடும். அது கன்னங்களின் ஓரங்களில் குத்தி காயம் ஏற்படுத்தலாம்.

அது ஆறாமல் இருந்தால், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல் தானே என, அலட்சியமாக இருக்காமல், வலி ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும்.