மூளையிலும் வைக்கலாம் ஸ்டென்ட!
உண்மையில், 80 சதவீத பக்கவாதம் தடுக்கக்கூடியவை. அதை அறிய ஆஞ்சியோகிராம் செய்யலாம்.
அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மூளை தமனி குறிப்பிடத்தக்க அளவில் குறுகக்கூடும் என்று பரிசோதனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஞ்சியோகிராம் மூளையின் ரத்த ஓட்டம், சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.
கரோடிட் எண்டார்டெரெக்டோமி மூலம் கழுத்து தமனிகளில் உள்ள பிளாக்குகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம்.
கரோடிட் ஸ்டென்டிங் குறைந்தபட்ச ஊடுருவும் நுட்பங்கள் மூலம் குறுகலான தமனிகளை விரிவடையச் செய்யலாம்.
இன்ட்ராக்ரானியல் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் - மிகவும் மென்மையானது. அதிக அளவில் செய்யப்படுகின்றன.
தீவிர பாதிப்பு இருந்தால், பெருமூளை பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து, அடைபட்ட தமனிகளைச் சுற்றி ரத்த ஓட்டத்தை சீராக்கலாம்.
பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள், மூளை நாள பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
இதயத்தின் அடைபட்ட தமனியை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது போன்ல், நியூரோ-ஆஞ்சியோபிளாஸ்டி, மூளைக்கு தீவிர பாதிப்பு எற்படுவதற்கு முன் செய்யலாம்.