மன நலம் காக்கும் உணவுகள் சில !

கீரைகள்... மன அழுத்தத்தை போக்கும் உணவுகளில் முக்கியமானது இது. பல கீரைகளில் மக்னீசியம், கெரோட்டின் போன்ற மனதுக்கு அமைதி, உற்சாகம் தரும் உட்பொருட்கள் உள்ளன.

பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் என்பதே இருக்காது என்பதால் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.

சிறுதானியங்களில் நார்ச்சத்து, இரும்பு, புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளன. எளிதில் செரிமானமாவதால், உடலுக்கு ஊட்டச்சத்தையும் மனதுக்கு நலத்தையும் தரும்.

மீன், முட்டை போன்றவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியிருக்கின்றன. இவை மன அமைதியை அளிப்பவை.

தயிர் எலும்பு வளர்ச்சிக்கு துணைப்புரிவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. மாதவிடாயின் போது தயிரை சாப்பிட்டு வர படபடப்பு குறைந்து மன அமைதி கிடைக்கும்.

இயற்கையில் கிடைக்கும் சத்தான பொருட்களில் பழங்கள் முக்கியமானது. இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், மனதுக்கு அமைதியையும் அளிப்பது குறிப்பிடத்தக்கது.