இன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம்

உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மே 2019 இல் நடைபெற்ற 72வது உலக சுகாதார சபையில், உலக நோயாளி பாதுகாப்பு தினத்தை நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்தினம் மருத்துவத்தில் நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்தவும், சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்துகிறது.

உடல்நலத்தை பாதுகாப்பதில் மருத்துவத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை சுகாதாரத்தில் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது.

இத்தினம், சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நோயாளிகளின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

தடுக்கப்படக்கூடிய மருத்துவப் பிழைகளால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது மிகவும் அவசியமாகும்.

'ஒவ்வொரு புதிதாகப் பிறந்த சிசுவுக்கும், உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பராமரிப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.