இன்று பாரதியார் நினைவு தினம்!

உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்தால் எல்லா இன்பங்களும் வாழ்வில் உண்டாகும்.

சத்தியம் ஒன்றே. ஆனால், அதனை ஆராதிக்கும் வழிகள் எண்ணிக்கையில் அடங்காது.

இயற்கையை நேசித்து வாழ வேண்டும். எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம்.

பிறரது துன்பத்தை தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவதும் ஒருவகையான தானம் தான்.

வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்

ஜீவகாருண்யமே எல்லா தர்மங்களிலும் மேலானது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.

எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.