வாழைப்பூ தோசை ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: தோசை மாவு - 4 கப், வாழைப்பூ - 1 கப், காய்ந்த மிளகாய் - 8, பெரிய வெங்காயம் - 3.

தேங்காய் துருவல், கடலை எண்ணெய், உப்பு, தண்ணீர், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவையான அளவு.

வாழைப்பூவை சுத்தம் செய்து, காய்ந்த மிளகாயுடன் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை வதக்கவும்.

இவற்றை தோசை மாவுடன் தேவையானளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பதமாக்கி, தோசையாக ஊற்றவும்.

இருபக்கமும் நன்றாக வேகவிட்டு எடுத்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ தோசை ரெடி. தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.