குட்டீஸ்களுக்கு பிடித்தமான பாலக் பூரி

தேவையானப் பொருட்கள்: கோதுமை மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 5, பாலக்கீரை- 3 கட்டு, சீரகம் - 2 ஸ்பூன், கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

பாலக்கீரையை உப்பு கலந்த நீரில் நன்றாக கழுவி, வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

வேக வைத்த கீரையுடன், சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

பாத்திரத்தில் பாலக்கீரை கலவையை போட்டு, அதில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும்.

அடுப்பில், கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன், பிசைந்து வைத்த மாவை பூரிகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

இப்போது, ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலக் பூரி ரெடி.

சைடு டிஷ் ஆக தக்காளி சட்னி அல்லது உருளைக்கிழங்கு மசியல் சாப்பிட சுவை அள்ளும். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர்.