வாரணாசிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
காசி என அழைக்கப்படும் வாரணாசி நகரம், தெருக்கள் நிறைந்தது; மக்கள் அடர்த்தியும் அதிகம். தற்போது தினசரி பக்தர்களின் வருகை, இரண்டு லட்சத்தை தாண்டி விட்டது.
கடந்தாண்டில் வாரணாசிக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை, 11 கோடியாக இருந்தது.
அயோத்தியில் பால ராமர் கோவில் திறப்புக்கு முன், ஆண்டுக்கு, ஒரு கோடி பக்தர்களே வந்து சென்றுள்ளனர்.
அக்கோவில் திறப்புக்கு பின், பக்தர்களின் வருகை பல கோடியை தாண்டி விட்டது.
அதன்படி, இந்தாண்டில், செப்., வரை, பக்தர்களின் வருகை, 14 கோடியை தாண்டி விட்டது.
காசிக்கும், தமிழகத்துக்கும் வரலாற்று சிறப்புமிக்க இணைப்பை வலுப்படுத்தும் விதமாக, நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.