நெயில் ஆர்ட் செய்ய தெரிந்தால் லேடீஸ் நகமெல்லாம் பூ!
கைக்கு மருதாணி இட்டு அழகுபடுத்திக் கொண்ட பெண்களின் விரல் நகங்களில் இன்று ஓவியங்கள் மின்னுகின்றன. இதுதான் இன்று டிரெண்ட்.
பெண்களின் நகங்களை ஓவியமாக மாற்றும் நெயில் ஆர்ட் நகர பெண்களை நகரவிடாமல் இழுக்கிறது.
நெயில் பாலிஷ், நெயில் எக்ஸ்டென்ஷன், ப்ரெஷ்- ஆன் நெயில், பிரைடல் நெயில் ஆர்ட் என பல்வேறு நெயில் ஆர்ட் ஸ்டைல்கள் உள்ளன.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அன்றாட ஆடைக்கும் ஏற்றவாறு, தனிப்பட்ட டிசைன்கள் உருவாக்குவது இன்றைய பேஷன்
புள்ளிகள், கோடுகள், நட்சத்திரங்கள், மிருகங்களின் தோற்றங்கள் மற்றும் கற்பனை வடிவமைப்பு ஆகியவை எளிதாகச் செய்யக்கூடிய சில நெயில் ஆர்ட் வகைகள் ஆகும்.
ஒரு அடிப்படை வண்ணத்தை பூசி, அது காய்ந்த பிறகு மற்ற டிசைன்களை செய்ய வேண்டும். அதுதான் ஒன்றோடொன்று இணையாமல் தனித்தன்மை தரும்.
பல்வேறு வகையான பிரஷ்கள், டாட்டிங் கருவிகள் மற்றும் ஸ்டென்சில்கள் கடைகளில் தாராளமாக கிடைக்கின்றன.
இவைகளுடன் வீட்டில் உள்ள சிறிய ஊசிகள், பின் அல்லது ஒரு பழைய பென்சில் கூட பயன்படுத்தி நெயில் ஆர்ட் வடிவங்களை உருவாக்கலாம்.