இன்று உலக நுகர்வோர் தினம்!
நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகளை பெற்றிடவும், விழப்புணர்வு ஏற்படுத்தவும் 1983 முதல் மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
1962ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார்.
'பாதுகாப்பான தயாரிப்புகள், நம்பிக்கையான நுகர்வோர்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
நுகர்வோர் உரிமைகள் என்பது வாங்கும் பொருளின் தரம், விலை, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்வது.
இந்தியாவில், டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் சந்தை துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நுகர்வோர் இயக்கங்கள் இந்நாளைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.