இன்று உலக மகிழ்ச்சி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது

மக்கள் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எப்போதும் பிரச்னைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி இழந்து துன்பம் சூழ்ந்துக்கொள்ளும்.

மகிழ்ச்சியுடன் நாம் வாழவிரும்பினால் நம்பிக்கை தரக்கூடிய செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

'சமூக ஊடகம், மகிழ்ச்சி' என்பது இந்தாண்டின் மையக்கருத்து.

இன்று நாம் செய்யும் செயல்கள், நாம் விரும்பும் மற்றும் எதிர்பார்க்கும் விஷயங்களில் மகிழ்ச்சியை கண்டறிவது, நாளைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவக்கூடும்.