கோடை வெயிலுக்கு இதமாக மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட் இதோ!
மாம்பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கஸ்டர்ட் பொடி, பால், தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்க கலக்கவும்.
விருப்பப்பட்டால், சுவைக்காக வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கலாம்.
அரைத்த மாம்பழத்துத்துடன், கஸ்டர்ட் கலவையை நன்றாக கலக்கவும்.
பிரீசரில் 2 மணி நேரம் வைத்து எடுத்தால், சில்லென்ற சுவையான சுவையான மாம்பழ கஸ்டர்ட் இப்போது ரெடி.
இதை ஒரு கிளாசில் ஊற்றி, அதற்கு மேல் நறுக்கிய பாதாம் பிஸ்தா துாவி அலங்கரிக்கலாம். விருப்பப்பட்டால், புதினா இலையும் சேர்க்கலாம்.
அடிக்கும் கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான இந்த மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட்டை, குட்டீஸ்கள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.