குட்டீஸ்களை அசத்தும் கார்த்திகை அப்பம்

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி மாவு - 1 கப், வெல்லம் - 1 கப், ஏலக்காய் துாள் , தேங்காய் துருவல் - சிறிதளவு, எண்ணெய் - தேவையானளவு.

பொடித்த வெல்லத்தில், அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

வெல்லம் கரைந்தவுடன், பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் துாள் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை கரண்டியால் எடுத்து அப்பம் போல் ஊற்றவும்.

ஓரிரு நிமிடங்களில் இருபக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்தால், பஞ்சு போன்ற மென்மையான, இனிப்பான அப்பம் ரெடி.

குட்டீஸ்கள் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.