இன்று உலக வேட்டி தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜன., 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. இதனால் தமிழகத்தில் ஜன., 1 - 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது.

வேட்டியை அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு என பலவாறாக அழைக்கப்படுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினரிடம் வேட்டி அணியும் பழக்கத்தை அதிகரிப்பது, கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்கும் நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015 முதல் ஜன., 6 உலக வேட்டி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது.

இதனை அடுத்து மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் இன்று சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.