இன்று தேசிய பறவைகள் தினம்!

பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியாவில் ஆண்டுதோறும் ஜன. 5ல் தேசிய பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் 30 ஆண்டுகளில் 60 சதவீத பறவைகள் அழிவை சந்தித்துள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது.

பறவைகள், தான் உண்ணும் தானியம், பழங்களை தன் எச்சத்தின் வாயிலாக மண்ணில் வளரச் செய்து பசுமைப் போர்வையை உருவாக்குகிறது.

குறிப்பாக தாவரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய பூச்சியினங்களை இரையாக்கி, மேலும் அவற்றை கட்டுப்படுத்தி பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது.

தமிழகத்தில் புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, பாம்புதாரா, நீர்காகம், கூழைக்கிடா, வண்ண நாரை, கரண்டிவாயன் போன்ற பல பறவை இனங்கள் வாழ்கின்றன.

அரிய வகை பறவை இனங்கள் இயற்கை சீற்றம், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.

பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.