உடலில் வைட்டமின் டி சத்து குறைந்தால்...!

நம் உடம்பின் அடிப்படை கட்டமைப்பில், வைட்டமின், 'டி'யின் பங்களிப்பு மிக முக்கியமானது.

கால்சியம் உட்கிரகத்தல் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு திறன், கணையத்தின் செயல்பாட்டை துாண்டி, இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்தி நீரிழிவு வராமல் தடுக்கிறது.

'ஹார்மோன்'களின் செயல்பாட்டில் பக்கத்துணை, சிறுநீரகம், இதயத்தின் செயல்பாடுகளில் உறுதுணை, இதய தசைகளுக்கு வலு சேர்ப்பது என்று முக்கிய பங்காற்றுகிறது.

வைட்டமின், 'டி' உடம்பில் சேராவிட்டால், நிறைய பாதிப்புகள் வரும். அதனால், கால்சியம் பற்றாக்குறை வரும்.

இதனால், 'ஆஸ்டியோபோரசிஸ்' - எலும்பு உளுத்து போகுதல், 'ஆஸ்டியோமலேசியா' எனப்படும், எலும்பு மென்மையாகி, அதன் கடின தன்மை குறைந்து போகும்.

குழந்தைகளுக்கு வரும், 'ரிக்கர்ட்ஸ்' - எலும்பு வளைதல் போன்ற பாதிப்புகள் வரும். உடலில் கால்சியம் குறைவாக இருப்பவர்களுக்கு, 'டைப் 1 டயாபடீஸ்' வரும் வாய்ப்பு அதிகம்.

'ரெனின்' எனும், 'ஹார்மோன்' சுரப்பை, வைட்டமின், 'டி' உடம்பில் அதிகப்படுத்தும். இந்த 'ஹார்மோன்' ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதால், ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

வைட்டமின், 'டி' உற்பத்திக்கு, இள வெயிலில் சில நிமிடங்கள் நின்றால் போதுமானது.