கல்லீரலில் கொழுப்பு படியும் பேட்டி லிவர் நோயை குணப்படுத்துவது எப்படி?
மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படியும் நோய் தான், கல்லீரல் செயலிழப்பு ஏற்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது.
கொழுப்புள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது இதற்கு காரணமில்லை; மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதே காரணம்.
அது அதிக தானியமாகவோ, இனிப்பாகவோ இருக்கலாம். நாம் உண்ணும் எக்ஸ்ட்ரா மாவுச்சத்து அனைத்தும் கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படும்.
அதாவது, மாவுச்சத்தின் அளவு உடல் முழுவதும் தொப்பை, தொடை என்று சேமிக்கப்பட்டு எஞ்சியது உள்ளுறுப்புகளில் சேமிக்கப்படுகிறது.
இதனால், ட்ரைகிளசரைடுகள் எனும் கொழுப்பு, கல்லீரல், கணையம் உள்ளிட்ட அனைத்து உள்ளுறுப்புகளிலும் படிய ஆரம்பிக்கிறது.
தினமும் நீங்கள் உண்ணும் உணவில் மாவுச்சத்து அளவு 300 - 400 கிராம் என்ற அளவிலுள்ளது. அதை 50 கிராமிற்கு கீழ் குறைக்க வேண்டும். அதைத்தான் 'பேலியோ உணவுமுறை' செய்கிறது.
மாவுச்சத்தை குறைப்பதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு படியும் நோயை சரி செய்ய முடியும்.
தானியங்கள் சார்ந்த உணவு முறையில் அதிக மாவுச்சத்து தினமும் சேர்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உண்ணும் உணவு முறையில் பசி அடங்குவதில்லை.
காலை நான்கு முட்டை, மதியம் காய்கறி, இரவு மாமிசம் என்று சாப்பிட்டால் மாவுச்சத்து 50 கிராமிற்கு கீழ் குறைக்கப்படுகிறது.
குறைக்கப்பட்ட மாவுச்சத்துக்கு பதிலாக கொழுப்பு மற்றும் புரதம் மூலம் கலோரிகள் உண்ணப்படுகின்றன. புரதம், கொழுப்பு இரண்டும் பசி உணர்வை கட்டுப்படுத்தக்கூடியவை.
தினமும் உடற்பயிற்சி செய்வது, மிதமான வேகத்தில் ஒரு மணிநேரம் நடப்பது, ஜிம் எக்சர்சைஸ் செய்வது கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
கார்பனேட்டட் குளிர்பானங்கள் தினமும் குடித்தாலும் கல்லீரல் நோய் வரும் வாய்ப்பு மிக அதிகம் என்பது டாக்டர் பரூக் அப்துல்லாவின் அட்வைஸாகும்.