ஒவ்வாமையால் பிரச்னையா? எவ்வாறு சரி செய்வது?

ஒவ்வாமை காரணமாக ஏற்படும் நாசி அழற்சி துாசி, உணவு பொருட்கள், வாசனை திரவியங்களால் மூக்கின் உட்பகுதி வீக்கம் அடைந்து தும்மல், மூக்கு நீர் வடிதல், மூக்கு அடைப்பு ஏற்படுகிறது.

பின்னர் அடிக்கடி தும்மல், மூக்கில் அல்லது கண்களில் அரிப்பு, கண்களில் நீர் வருதல், சிலருக்கு தலைவலி அல்லது முகத்தில் அழுத்தம் ஏற்படும்.

இவ்வாறு இருந்தால் துாசி உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது, குளிர்ந்த காற்று உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

செல்லப்பிராணி வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

படுக்கை விரிப்பு, தலையணையில் துாசி படராமல் கவனிக்க வேண்டும்.

இந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மூக்கு நீர் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இருந்தால், காய்ச்சல் அல்லது கடுமையான தலைவலி இருந்தால் சிகிச்சை பெறவேண்டும்.