கற்பூரவள்ளி வளர்ப்பு முறையும், ஆரோக்கிய நன்மைகளும்!

மூலிகை வகையைச் சார்ந்தது தான், கற்பூரவள்ளி செடி. இந்த செடியை வீட்டில் வளர்ப்பது, மிக எளிது. சின்ன தண்டை நறுக்கி மண்ணில் சொருகி வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றினால் வேர் விட்டுவிடும்.

ஆஸ்துமா, காசநோய், சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு, மூக்கடைப்பு, சைனஸ், சிறுநீரக பிரச்னை என பல பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும்.

செடி வைத்த ஆறு மாதங்களில் இலைகள் செழிப்பாய் வளர்ந்து விடும். அப்போது தான் அந்த இலையில், 'மென்தால்' சதவீதம் அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு பயன்படும்.

சளிக்கு இதன் இலைகளை கையாலேயே கசக்கி, 2 மி.லி., சாறு எடுத்து, 8 மி.லி., தேனுடன் கலந்து பருகலாம்.

இதை கொதிக்க வைக்கும் போது நீரின் நிறம் மாற ஆரம்பிக்கும்போதே இலைகளை எடுத்துபோட்டு, வடிக்கட்டி, ஆற வைத்து குடிக்கலாம்; குழந்தைகளுக்கும் குடிக்கக் கொடுக்கலாம்.

துளசி இலையை சாப்பிடுவது போலவே, கற்பூரவள்ளி இலையுடன், நான்கு மிளகு வைத்து மடித்து மென்று சாப்பிடலாம் இருமலுக்கு நல்லது.

மூக்கடைப்புக்கு சிறு துளி சாற்றை மூக்கில் விடலாம்; வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் மூக்கடைப்பு, ஜலதோஷம் குணமாகும்

தலைவலிக்கு இதன் இலையுடன் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.