மலிவா கிடைக்குதேன்னு சத்துகள் நிறைஞ்ச கொய்யாவை தவிர்க்காதீங்க !
பலரும் விலை உயர்ந்த வெளிநாட்டுப் பழங்களைத் தான் தேடி ஓடுகிறோம்.
ஆனால், நம் ஊர் சந்தைகளில் மலிவாகக் கிடைக்கும் 'கொய்யா' தான் உண்மையில் ஒரு சத்து பெட்டகம் என்கின்றனர் டயட்டீசியன்கள்.
100 கிராம் கொய்யாவில் 5.2 கிராம் நார்ச்சத்து, 212 மி.கிராம் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துகள் அடங்கியுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் இது உதவுகிறது.
உடல் எடையை குறைக்கவும், செரிமானம் பிரச்னை நீங்கவும், தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது.
இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள போலேட் சத்து, கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.
எனவே தினம் ஒரு கொய்யா சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அவசரமாக பள்ளிக்கு ஓடும் பிள்ளைகளும், வேலைக்கு செல்லும் பெண்களும், இதை காலை உணவாக கூட எடுத்துக் கொள்ளலாம் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.