கங்கை... உலகின் பெரிய டெல்டா இது !

கங்கை டெல்டா உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.

இது இந்தியாவின் மேற்கு வங்கம், வங்கதேசத்தில் பரவியுள்ளது.

கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் மேக்னா போன்ற ஆறுகளின் நீர்ப்பரப்புகளால் உருவானது.

பொதுவாக 'ஆற்று டெல்டா' என்பது ஆறு, கடலில் சேரும் சமவெளி பகுதி.

'டெல்டா' என்ற கிரேக்க வார்த்தைக்கு 'முக்கோணம்' என பொருள்.

முதலில் 'டெல்டா' வார்த்தை, முக்கோண வடிவம் கொண்ட நைல் ஆற்று சமவெளியை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

தற்போது அனைத்து ஆற்று டெல்டாவும் அப்பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

கங்கை டெல்டாவின் கடலோரப் பகுதியிலுள்ள, சுந்தர்பன்ஸ் சதுப்புநிலக் காடுகள் உலகப் புகழ்பெற்றவை.