ஆடையின் தேர்வு உயரத்தைக் கூட்டும்...

ஆண்கள் அணியும் ஆடையின் தேர்வுவில் சிறிது கரெக்ட் செய்து விட்டால் உயரத்தை அதிகம் இருப்பதுபோல் காட்ட முடியும் என ஆடை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கால்கள் நீளமாகும் ஆடை அணியும்போது, நம் உடலை சரியான விகிதத்தில் பிரித்துக்காட்டுவது அவசியம்.

முதலில் '1:2 ரூல்ஸ்'-ஐ பின்பற்ற வேண்டும். அதாவது, உங்கள் உடலின் மேல் பகுதியை 1/3 பங்காகவும், கீழ் பகுதியை 2/3 பங்காகவும் இருக்கும்படி, ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

உயரமாக தெரிய விரும்புபவர்களுக்கு, சிறந்த தேர்வு 'மோனோக்ரோம்' எனப்படும் ஒரே நிற ஆடை அணிவதுதான்.

மேலாடை மற்றும் கீழாடை (டாப் டூ பாட்டம்) ஒரே நிறத்தில் அணியும்போது, அது பார்ப்பவர்களுக்கு, ஒரு 'மேஜிக்' தோற்றத்தை உருவாக்கும்.

பெல்ட் அணியாமல் 'டக்- இன்' செய்யும்போது, இடையில் தடையற்ற ஒரு தோற்றம் (Seamless look) உருவாகி, உயரமான பாவனையை ஏற்படுத்தும்.

ஆடை மட்டுமல்லாது, தலைமுடியும் உயரத்தை கூட்டித் தரும். தலைமுடியை அடர்த்தியாக (Voluminous) வைத்துக்கொள்வது உங்களை உயரமாக காட்ட உதவும்.