மரவள்ளிக்கிழங்கின் மகத்தான பயன்கள் அறிவோமா...

மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்து மிகுந்துள்ளது.

இதை சாப்பிடுவதால், உடலுக்கு தினசரி தேவையான, 'வைட்டமின்' மற்றும் 'மினரல்கள்' கிடைக்கின்றன.

இதில் கண் பார்வை மேம்பட தேவையான ஊட்டச்சத்தான வைட்டமின், 'ஏ' அதிகமாக உள்ளது.

அடிக்கடி உங்கள் உணவில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொள்வதால், உடல் எடையை குறைக்கலாம்.

இதில் குறைந்த சோடியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கிழங்கிலுள்ள நார்ச்சத்து, குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது; அழற்சியைக் குறைக்கிறது.

இதில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் கே சத்துகள் நிறைந்து உள்ளது. அவை தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும்.