இன்று ரமண மகரிஷி பிறந்த தினம்!
மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை.
உழன்று கொண்டேயிருக்கும் மனதை தியானம் மூலம் வசப்படுத்த முடியும்.
நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்று ஒரு போதும் நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.
மனம் அலையாமல் ஒரே நிலையில் குவியும் போது தான், அதன் சக்தி சேமிக்கப்பட்டு வலிமை பெறுகிறது.
சாந்தமான, சுத்தமான மனதுடன் செய்வது எல்லாம் நற்செயல்கள்.
உங்கள் மனம் எப்போதும் பூப்போல மலர்ந்திருக்கட்டும். அப்போது தான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
மனவலிமை இருந்தால் மட்டுமே மனிதனால் சொந்தக்காலில் நின்று செயலாற்ற முடியும்.
ஆரோக்கியம் பெற விரும்பினால் உணவு, துாக்கம், பேச்சு ஆகியவற்றில் மனிதன் அளவாக இருக்க வேண்டும்.