எலும்பு தேய்மானத்துக்கு வழிவகுக்கும் காபி

இதய ஆரோக்கியம் முதல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பது வரை, தேநீர் மற்றும் காபி இரண்டும் பல நன்மைகளுடன் தொடர்புடையவை.

இருப்பினும், காய்ச்சும் நேரம் மற்றும் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவை கணக்கில் கொண்டு அளவாகப் பருக வேண்டும்.

பல ஆய்வுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின்படி, தினமும் மூன்று கப் காபி குடிப்பது, பக்கவாதம், கரோனரி தமனி நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

தினமும் 200 - 400 மி.கி., கேபின் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.

இதைவிட அதிகமாக காபி குடிப்பது, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, 'அரித்மியா' எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு, துாக்க கலக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்நிலையில், 10,000 பெண்களிடம் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காபியை விட தேநீர் அருந்துபவர்களுக்கு இடுப்பு எலும்பு தாது அடர்த்தி சற்றே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மிதமான அளவு காபி அருந்தினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எலும்புத் தேய்மானத்துக்கு வழிவகுக்கக்கூடும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.