கணைய அழற்சி ஏற்பட காரணமும் சிகிச்சையும்!

கணைய அழற்சி ஏற்பட முக்கிய காரணம் ஆண்களில் மதுப் பழக்கம், பெண்களில் பித்தப்பை, பித்த நீரில் கற்கள், மேலும் கொழுப்பில் டிரைகிளிசரைடு அளவு அதிகமாக இருப்பது ஆகும்.

மேலும் பாரா தைராய்டு சுரப்பியில் இருந்து அதிக அளவு கால்சியம் சுரந்து, ரத்தத்தில் சேருவது ஆகியவை கணைய அழற்சிக்கான பொதுவான காரணங்கள்.

கணையத்தில் சுரக்கும் என்சைம்கள் தேவைக்கு அதிகமாக சுரந்து, இரைப்பைக்குள் செல்லாமல் கணையத்தின் வெளியே கசிந்து, அவற்றை வெந்து போகச் செய்வது ஆட்டோ டைஜஷன் கணைய அழற்சி.

வாந்தி வரும் உணர்வு, காய்ச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பது, மஞ்சள் காமாலை ஆகியவை பொதுவான அறிகுறிகள்.

மிதமான பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியும். தீவிர பாதிப்பாக இருந்தால், அவசர சிகிக்சை தேவைப்படும்.

கணையத்தைச் சுற்றி சேர்ந்த திரவத்தில் தொற்று ஏற்பட்டு இருந்தால், ஸ்கேன் உதவியுடன் லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி உதவியுடன் நீரை வடிய வைக்க வேண்டும்.

முறையாக சிகிச்சை செய்தால், வெந்து போன கணையம் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து விடும்.

தீவிர பாதிப்பு இருப்பவர்களில், 0 -15 சதவீதம் பேருக்கு மீண்டும் கணைய அழற்சி வரும்.