ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் தோசை

தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 1, அரிசி மாவு - 1 கப், ரவை - கால் கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2.

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை - ஒரு கொத்து, சீரகம் - 1 ஸ்பூன், உப்பு மற்றும் எண்ணெய் - தேவையானளவு.

பீட்ரூட்டை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனுடன், அரிசி மாவு, ரவை, உப்பு, மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தொடர்ந்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டு மற்றும் தேவையானளவு தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.

10 நிமிடம் கழித்து, தேவையானளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், சிறிது எண்ணெய் விட்டு வார்த்து இருபக்கமும் வேகவிட்டு எடுத்தால், பீட்ரூட் தோசை ரெடி.

தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிட சுவை அள்ளும். காலை டிபனுக்கு ஏற்றது.