பார்லி பாயசம் ரெசிபி
தேவையானப் பொருட்கள்: பார்லி - 1 கப், பாசிப்பருப்பு - 1 கப், பால் - 1 கப், வெல்லம் - கால் கப்.
முந்திரி, திராட்சை, தண்ணீர் - தேவையானளவு, ஏலக்காய்த்துாள், சுக்குப்பொடி - சிறிதளவு.
பார்லியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த பார்லியுடன், பாசிப்பருப்பை சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
அதில், சிறிது பால் மற்றும் வெல்லம் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கிளறவும்.
வெல்லம் கரைந்தவுடன், சிறிது ஏலக்காய்த்துாள் மற்றும் சுக்குப்பொடி சேர்த்து, இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து, சூடாக பறிமாறலாம்.
பிரிஜ்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி உண்பர்.