உடல் ஆரோக்கியத்துக்கு வாழைத்தண்டு துவையல்
தேவையானப் பொருட்கள்: வாழைத்தண்டு: சிறிய துண்டு, காய்ந்த மிளகாய்: 6, பச்சை மிளகாய்: 1, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு தலா 1 டீஸ்பூன்...
பச்சை மிளகாய் - 2, பெருங்காய துாள்: 2 சிட்டிகை, தேங்காய் எண்ணெய், உப்பு: தேவையானளவு, புளி, கறிவேப்பிலை: சிறிதளவு.
கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடானவுடன், துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், புளி சேர்த்து நன்கு வதக்கி தனியே வைக்கவும்.
மீண்டும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி சூடு ஆறியுவுடன் மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
பின், கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காய துாள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில், மிக்சியில் அரைத்து வைத்த விழுதை போட்டு லேசாக வதக்கினால், சுவையான வாழைத்தண்டு துவையல் ரெடி.
சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் இதை சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.