அல்சைமர்ஸ் நோயும் மூளையில் ஏற்படும் மாற்றங்களும்!
அல்சைமர்ஸ் நோய் என்பது மூளையை சேதப்படுத்தும் நரம்பியல் சிதைவு நோயாகும்.பெண்களை ஆண்களை விட 3 மடங்கு அதிகம் பாதிக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
வீட்டை மட்டும் நிர்வகிக்கும் பெண்கள் மட்டுமல்ல, அலுவலகம் செல்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என பெண்களில் மிகச் சிலர் தவிர, மற்றவர்கள் புதிதாக எதுவும் கற்பதில்லை.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், பேரன், பேத்தி என்று நேரத்தை செலவு செய்கின்றனரே தவிர, மூளைக்கு வேலை தருவதில்லை. மூளையை சுறுசுறுப்பாக வைத்தால் அல்சைமர்ஸ் வராது.
மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் உள்ளன. இந்த நரம்பு செல்கள் தனித்தனியாக இயங்காது. ஒன்றுடன் ஒன்று தொடர்பு எற்படுத்திக் கொண்டு தான் இயங்கும்.
இந்த நரம்பு செல்களில் 30 சதவீதம் மட்டுமே இயல்பாக தொடர்பில் இருக்கும். மற்றவை செயலற்ற நிலையில் இருக்கும்.
இவற்றிற்கு இடையில் எந்த அளவு தொடர்பை எற்படுத்துகிறோமோ, அந்த அளவு மூளை ஆரோக்கியமாக இருக்கும்.
நிறைய புத்தகம் வாசிக்கலாம். கணக்குகள் போடலாம். புதிருக்கு விடை காணலாம். தினமும் எதோ ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்ளலாம்.
வலது, இடது என இரு மூளைகள் உள்ளன. தேவையான நினைவுகளை பதித்து வைத்திருக்கும் பகுதி வலது மூளை.
தினமும் செய்யும் வேலைகளை வலது மூளையின் 'செரிபல்லம்' எனற பகுதி பதித்து நினைவில் வைத்துக் கொள்ளும்.
இடது மூளை தான் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் பகுதி. பகுத்தறியும் திறன் கொண்ட 'அனலிட்டிக்கல்' மூளை.
புதிது புதிதாக கற்கும் போது, புதிய நியுரோ செல்களுக்கிடையே தொடர்புகள் உருவாக்கி, புத்திசாலித்தனத்தை அதிகரிக்கச் செய்யும்.