மருத்துவத்தில் புரட்சி ஏற்படுத்தும் ஆல்பா போல்ட் நுண்ணறிவு!
ஆல்பா போல்ட் என்ற செயற்கை நுண்ணறிவை, 'கூகுள்' நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இது, உடல் உறுப்புகளின் திசுக்களில் உள்ள சிக்கலான புரத சங்கிலி, வினாடியில் எப்படி சுருங்கும், எந்த வடிவில் சுருங்கும் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடுகிறது.
நன்மைகள் வைரஸ், பாக்டீரியா மற்றும் குடல் கொக்கிப்புழு போன்றவற்றின் புரத சங்கலியின் தன்மையையும், அதை அழிக்கவல்ல மருந்தையும் மிக வேகமாக தயாரித்து விடுகிறது.
தீராத புற்று நோய், அல்சைமர், மறதி நோய் ஆகியவற்றுக்கு காரணமான, தாறுமாறாக சுருங்கும் புரத சங்கிலியையும் கண்டுபிடித்து, அதற்கு தீர்வாக மருந்தையும் ஆல்பா போல்ட் உதவியுடன் கண்டறிந்து விடலாம்.
சுற்றுப்புற சூழலை கெடுக்கும் பிளாஸ்டிக்குகளை உண்டு அழிக்கும் புரதங்களையும், இந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கி, பிளாஸ்டிக் குப்பையை அழித்து விடலாம்.
இந்த செயற்கை நுண்ணறிவு, பாக்டீரியா, வைரஸ்களின் புரத சங்கிலியை எளிதில் கண்டறிந்து விடுகிறது. அதன் பிறகு, அதற்கேற்றாற்போல் மருந்தையும் சொல்லி விடுகிறது.
மனித இனம், கோவிட் காலங்களில் தடுப்பூசி இல்லாமல், சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்தது.
இப்போது, ஆல்பா போல்ட் உதவியால், சில மாதங்களிலேயே எப்பேற்பட்ட நோய்க்கும் தடுப்பூசி கண்டறிந்து விட முடியும்.
குணப்படுத்த முடியாத தீர்வு காணாத நோய்களுக்கு போதிய மருந்து இல்லாத நிலையில், ஆல்பா போல்ட் பேருதவியாக இருக்கப் போகிறது என கூறப்படுகிறது.