தற்கொலையை அதிகரிக்கும் காற்று மாசுப்பாடு... ஆய்வில் தகவல்!

தற்கொலை என்பது ஒரு கோழைத்தனம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்நிலையில் அதிகரிக்கும் வெப்பநிலை, காற்றுமாசு ஆகியவையும் தற்கொலைக்கு காரணமாகிறது என அமெரிக்காவின் யுடாக் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 2000-2016ல் பதிவான 7500 தற்கொலை சம்பவங்களை ஆய்வு செய்தது.

இதில் ஒவ்வொரு 9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உயர்வுக்கும், தற்கொலை எண்ணம் 5% அதிகரிக்கிறது.

மேலும், நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் உள்ளிட்ட வாயுக்கள் அதிகரிக்கும் போது, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மன ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.