திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் நிழற்குடை முன் வைக்கப்பட்டிருந்த திமுக விளம்பர பேனரால், பயணியர் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீசார் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, கட்சியினர் விளம்பர பேனரை அகற்றினர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.