மேற்காசிய போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஸ்ரீநகரில் மாணவ- மாணவியர் சீருடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.