திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராமத்தில் சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் வியாசபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.