உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதாட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலக தமிழ் காப்பக கூட்டியக்கம் சார்பில் எழும்பூர் பகுதியில் பேரணி சென்றனர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில, வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . இடம்: நியூ ஆவடி சாலை, அண்ணாநகர்
85 வயதுக்கு மேற்பட்டவர்கள்,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர். இடம்: திருநெல்வேலி..
இரட்டை இலை சின்னத்தை காண்பித்த கை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் முதல் முறையாக உதயசூரியன் சின்னத்தை காண்பித்து ஓட்டு கேட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.