மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும்தான் சொன்னாங்க... தேர்தல் வேற நெருங்குது, இந்த நேரத்துல டிவியை கொஞ்சம் மறைச்சு வைக்கலாம் என எடுத்து செல்கிறாரோ இந்த மூதாட்டி. இடம்: பொள்ளாச்சி பல்லடம் ரோடு தேர்முட்டி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..