தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல திருவிழாவில் பங்கேற்பவர்கள் வீட்டுக்கு செல்லும்போது இனிப்பின் அடையாளமாக கரும்பு கட்டுகளை வாங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருவிழாவில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள கரும்புகள்..
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..