சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட முடிவு செய்த போது எத்தனையோ போராட்டங்கள், ஒரு வழியாக மரங்களை பாதுகாக்கும் கோரிக்கையே வென்றது. இந்த சாலையை சூழ்ந்த மரங்கள் மனதுக்கு இதமாக காட்சியளிக்கின்றன. இடம்: பொள்ளாச்சி- ஆனைமலை ரோடு.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.