ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் சமீபத்தில் நிலவிய கடும் பனிப்பொழிவுக்குப் பின், வெண்ணிற பனி போர்த்திய இமயமலைத் தொடரின் பின்னணியில் கம்பீரமாக நிற்கும் குதிரைகள். பனி மூடிய மலைகளும், உறைபனியில் நனையும் குதிரைகளும் இணைந்து சிம்லாவை கனவு உலகம் போல மாற்றியுள்ளன.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.