நாளை நடைபெறும் குடியரசு தின விழாவினை, கொண்டாட நாடே உற்சாகமாக தயாராகி வருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்த ஒத்திகை அணிவகுப்பை முன்னின்று வழி நடத்திய மாணவி, சக மாணவியின் சீருடைப் பட்டையைச் சரி செய்தார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.