திருவள்ளூர், காவல்சேரி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்த குடிநீர் தொட்டி குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பூந்தமல்லி ஒன்றிய அதிகாரிகள் குடிநீர் தொட்டியை இடித்து அகற்றினர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.