ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள் கண்காட்சியின் போது, போர் மற்றும் தற்காப்பு கலைத் திறன்களை நம் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்தினர். அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளின் அணிவகுப்பு பொது மக்களைக் கவர்ந்தது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.