தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டி கோவை சின்னவேடம்பட்டி எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.