புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் விண்ணேற்பு அன்னை சர்ச் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் சீறிப்பாய்ந்து சென்ற காளையை அடக்க முயன்ற வீரர்கள்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.