கல்லிலே கலை வண்ணம் கண்டான்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் பொலிவு பெற்று தற்போது கலைநயம் மிக்க கற்கோயிலாக காட்சி தருகிறது .இம்மண்டபத்தை நிரந்தரமாக பார்வையாளர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்வையிட மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.