கேரளாவின் கொச்சி கோட்டை மைதானத்தில், 2026ம் புத்தாண்டை முன்னிட்டு பிரமாண்ட 50 அடி உயர, பாப்பஞ்சி உருவ பொம்மை எரிக்கப்பட்ட தருணத்தின் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடி மகிழ்ந்தனர். பாப்பஞ்சி என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் தீமைகளின் மொத்த உருவம் என அர்த்தம்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.