கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணியரால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று நிரம்பி வழிந்தது. கோவை செல்லும் 'இன்டர் சிட்டி' ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய கூட்டம்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.