ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் இருந்து, 40 நாட்கள் கடுமையான குளிர் நிலவும் பருவத்தை, ஜம்மு - காஷ்மீரில், 'சில்லாயி கலான்' என்று அழைக்கின்றனர். அங்குள்ள குல்மார்க்கில், பனி படர்ந்த பள்ளத்தாக்கை ரசித்த சுற்றுலா பயணியர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.