மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், கரையில் இருந்து கடலுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில், 'போர்டோ மேட்' எனும் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. 352 மீட்டர் நீளம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையில் எளிதான முறையில் மாற்றுத்திறனாளிகள் சென்று வருகின்றனர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.